இன்னும் எத்தனை நாட்கள் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே???
இன்னும் எத்தனை நாட்கள் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே???
தெரிந்ததுதானே, தேர்தல் வந்து விட்டது. நான்,அல்லது வேறு யாரோ எவ்வளவு சொன்னாலும் சிலருக்கு மண்டையில் ஏறப் போவது இல்லை! ஏன் இப்படி? எதனால் இப்படி? நமக்கு, பொதுவாக இந்தியர்களுக்கு, குறிப்பாக தமிழர்களுக்கு சூடு சுரணை மானம் ரோசம் வெக்கம் இதுவெல்லாம் இல்லையா? அந்தளவிற்கா நாம் தாழ்ந்து விட்டோம்??
நேற்று ஒரு இரவு சந்தையில் நடந்து கொண்டிருக்கையில் ஒரு சாரார் கேம்பில் இருந்து ஒரு சில சகோதரர்கள் சாப்பிட்டு கொண்டே (வேரு என்ன செய்ய இருக்கு குறிப்பிட்ட அந்த கேம்பில்)
‘அண்ணே, ப்ரி தி ஷிர்ட் வேனூமா ண்ணே’ என்று கேட்டது எனக்கு கடுப்பை கிளப்பியது. அவரவர் செய்வது அவர்களின் சொந்த விசயமாக இருந்தாலும் இந்த சில ஆட்களுக்கு வேறு வேலை இல்லையா என்று நினைக்க தோன்றியது..
இதோ 55 வருடங்கள் ஆகி விட்டன. நடக்கப் போகும் தேர்தல் முடிவுகளில் சில இடங்கள் நம் மக்களால் நிர்ணயிக்கபடும் அபாயம் இருக்கிறது என்பதை நினைத்து பார்க்கும் போது பயமாக இருக்கிறது. ஆங்காங்கே கொடுக்கப்படும் அரிசி பருப்புக்கும் சில்லரை பணத்துக்கும் உணவுக்கும் ஆசை படும் மக்கள் நன்றாக யோசித்து வாக்களிப்பார்களா? இல்லை இதில் யோசிப்பது என்ன இருக்கிறது என்று நினைத்து அதே தராசிற்கே எங்கள் ஓட்டு என்று போடுவார்களா??
கொஞ்சம் யோசிப்போமே!
மக்களின் நலம் காப்பது எந்த அரசாங்கமாயினும் அது அவர்களின் பொறுப்பு. இது வரை அது முழுமையாக நடந்ததா? இல்லை கொஞ்சம் ஆயினும் முழுமை பெற்றதா? வெரும் இந்தியர்கள் என்று மட்டும் பார்காமல் எல்லா மலேசிய மக்களையும் நினைத்து பார்த்தால் கூட ஏதாவது சரியாக நடந்திருக்க்றதா? அவரவர் பொருப்பில் இருப்பவர்கள் இருப்பதை சுருட்ட தானே பார்த்தார்கள். எல்லாவற்றையும் கேட்டு விட்டோம். பார்த்தும் விட்டோம். எப்போ மாருவோம்?? இன்னும் 50 வருடங்கள் கொடுப்போமா??
சாமி வேலு செய்த துரோகத்திற்குப் பிறகு இப்பொழுது நம்ப வைத்து கழுத்தை அருக்கும் இன்ராப்!
மீண்டும் நம் மக்களுக்காக ஒரு நினைவுருத்தல்.
பாரிசானுக்கு வாக்களித்தால் அதனால் பாரிசான் மீண்டும் ஆட்சி அமைத்தால்:-
பெருஞ்சாலைகளில் நிற்கும் ஏயிஸ் மூலம் அடுத்த மாதம் அபராதம் வந்தால், வாயை மூடிக்கொண்டு கட்டுங்கள்.
உங்கள் குடும்பத்தினர் யாரும் கொள்ளையடிக்கப்பட்டால் அதை பற்றி யாரிடமும் கூராமல் மூடிக்கொண்டு இருங்கள். இது நமக்கு தேவை என்று நினைத்துக் கொள்ளுங்கள்.
வெளி நாடு செல்ல நினைத்து விமான நிலையத்தில் நிற்கும் போது நீங்கள் ‘பிதிபிதி’ பணம் (லோன்) செலுத்தவில்லை, அதனால் போகமுடியாது என்று தடுக்கப்பட்டால், அது உங்களால்தான் என்று நினைத்து கொள்ளுங்கள்.
மலிகை பொருட்கள், கார் விலை சடீரென உயர்ந்தால் பேசாமல் போயி கொண்டே இருங்கள்! உங்களுக்குத்தான் பிர்1எம் பணம் கிடைத்ததே!!
உங்கள் பிள்ளைகள் சிறந்த தேர்ச்சிக்குப் பிறகும் உயர் கல்வி கூடங்களுக்கு மறுக்கப்பட்டால் புலம்பாதீர்கள்.
நம்ம ரோஸ்மா அக்கா விலை உயர்ந்த மோதிரம் போட்டிருந்தால் பேசாமல் இருங்கள், அதற்கும் நீங்கள்தான் காரணம்.
ஹ்ம்ம்ம்... போலிஸ் லோக் அப்பில் உங்களுக்கு தெரிந்தவர்கள் யாரும் மடிந்தால் அதற்கும் வாயை மூடிக்கொண்டு இருக்கவும்.
அரசியல்வாதிகள் கோடி கோடியாக கொள்ளை அடித்தாலும் பார்த்துக்கொண்டு இருங்கள்.
கடைசியாக நம் நாடு அனைத்துலக சந்தையில் கடனாளியாகி நிற்கும் போதும், உங்கள் பிள்ளைகள் வெளி நாடுகளுக்கு வீட்டுப்பணிப்பெண்களாக வேலைக்கு செல்லும் போதும் வாயை மூடிக்கொண்டு இருங்கள்.
தொடர்ந்து அம்னோ/பிஎன் கட்சிக்கு ஓட்டு போட்டால் இதுதான் கதி!
பார்த்து செய்யுங்கள்
Comments